தமிழ்நாடு

தஞ்சையில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்று உண்ணாவிரத போராட்டம் - பாஜகவினர் மீது வழக்கு

தஞ்சையில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்று உண்ணாவிரத போராட்டம் - பாஜகவினர் மீது வழக்கு

PT WEB

தஞ்சாவூரில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அனுமதியின்றி மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றதாக பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா உள்ளிட்ட 50 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் கொரோனா விதிகளை மீறி கூட்டம் கூடியதாக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 20 பேர் மீது தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.