வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தென்னாடு மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யபப்ட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு வழங்குவதென தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதையும், இதுதொடர்பாக கணக்கெடுப்பு நடைபெறுவதால் ஆறுமாத காலத்திற்கு தற்காலிக இடஒதுக்கீடாக பின்பற்றப்படும் என சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு முடிக்காமல் எப்படி இட ஒதுக்கீட்டை தமிழக அரசு நிர்ணயித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
68 சாதிகளை கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குகிறார்கள் என்றும் 22 சாதிகளை கொண்ட எம்.பிசி பிரிவினருக்கு 2.5% இடஒதுக்கீடு மட்டுமே வழங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 7 பிரிவுகளை கொண்ட வன்னியர்களுக்கு மட்டும் 10.5 % இட ஒதுக்கீடு எவ்வாறு தீர்மாணிக்கப்பட்டது. எனவே இது தேர்தல் லாபத்திற்காக ஒதுக்கப்பட்டது. தற்காலிக சட்டத்தின் அடிப்படையில் மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி தனது மனுவில் மனுதாரர் தெரிவித்திருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் தெரிவித்துள்ளனர்.