தமிழ்நாடு

டயர் வெடித்து விபத்து : நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்

டயர் வெடித்து விபத்து : நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்

webteam

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் கார் தீப்பிடித்து எரிந்தது. 

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு காரின் டயர் திடீரென வெடித்தது. இதில், நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்திற்குள்ளானது. 

இதைத்தொடந்து காரை ஓட்டி வந்த ஓட்டுநர் கிறிஸ்டோ உடனடியாக காரைவிட்டு கீழே இறங்கினார். இதனால் நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பினார். பின்னர், கார் மளமளவென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.