அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனது ஆதரவாளருக்கு சசிகலா தொலைபேசியில் ஆறுதல் கூறிய ஆடியோ வெளியாகியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வின்சென்ட் ராஜா என்பவர், சசிகலாவிடம் பேசியதாக அதிமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் அவரது கார் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வின்சன்ட் ராஜாவுக்கு சசிகலா தொலைபேசியில் ஆறுதல் கூறிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் அதிமுகவில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காது என்று கூறும் சசிகலா, தைரியமாக இருக்குமாறு வின்சென்ட் ராஜாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இதேபோல, மதுரையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது. அதில், அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் நியமனம் குறித்து கே.பி.முனுசாமியை மறைமுகமாக சுட்டிக்காட்டி சசிகலா விமர்சித்துள்ளார்.