தமிழ்நாடு

கார் மீது லாரி மோதி விபத்து : 2 பெண்கள் உய‌ரிழப்பு

கார் மீது லாரி மோதி விபத்து : 2 பெண்கள் உய‌ரிழப்பு

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி‌ மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவை சேர்ந்த நாகபூஷணம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்துள்ளார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓசூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.