தமிழ்நாடு

கோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

கோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

Rasus

கோவையில் சாலையோரம் நின்றவர்கள் மீது சொகுசு கார் மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை சுந்தராபுரத்தில் வேகமாக சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பூக்கடை மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 4 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல் பேருந்துக்காக காத்திருந்தவர்களில் 3 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

சொகுசு காரை ஓட்டி வந்தவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.