Keerthiga
Keerthiga pt desk
தமிழ்நாடு

இருளை விரட்டும் ஸ்வீட் மெழுகுவர்த்திகள்... பட்டதாரி பெண் அசத்தல்!

webteam

லட்டு, பாதுஷா, ஜிலேபின்னு வரிசையா இருக்குற இந்த இனிப்புகளை தீபாவளிக்கு ருசித்து மகிழன்னு நினைத்தால் நிச்சயமா அது மாயைதான்... தீபாவளிக்குதான் இவை தயார் செய்யப்பட்டது. ஆனால், ஒளியை பரப்புவதற்காக... இனிப்பு போல அச்சு அசலாக இருக்கும் இவை எல்லாமே ஒளியை பரப்பும் மெழுகுவர்த்திகள்... பட்டதாரியான கீர்த்திகாவின் படைப்புத் திறனில் இனிமையாக உருவானவை.

sweet shape candle

தூத்துக்குடியை சேர்ந்த இவர் முந்திரி அல்வா, திருநெல்வேலி அல்வா, சூரிய கலா, சந்திர கலா, காஜு கட்லி மற்றும் முறுக்கு, சோன்பப்டி, குளோப் ஜாமுன் என பல்வேறு இனிப்புகள் வடிவில் மெழுகுவர்த்திகள் தயார் செய்து அசத்தி வருகிறார்.

பொதுவாக கச்சா எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுப்பொருளில் இருந்து, தயார் செய்வதுதான் இந்த மெழுகுவர்த்திகள். ஆனால், கீர்த்திகா செய்யக்கூடிய இந்த மெழுகுவர்த்தி சோயா வேக்ஸ் எனப்படும் சோயா எண்ணையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவற்றில் வாசனை திரவியங்கள் கலப்பதால் எறியும்போது நல்ல நறுமணம் தருகிறது என்றார்.

sweet shape candle

லட்டு போன்று வடிவில் உள்ள மெழுகுவர்த்தி 100 ரூபாயும், மொத்தமாக வாங்கினால் 75 ரூபாய் வரையும் விற்பனை செய்கிறார். விதவிதமாக இனிப்புகள் வடிவில் இருக்கும் இந்த மெழுகுவர்த்திகளின் விலையும் இவரிடம் விதவிதமாக தான் இருக்கிறது.