தமிழ்நாடு

பொதுதரிசனம் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Veeramani

மதுரையில் 7 நாட்களுக்கு கோவில்களில் பொது தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று கூட்டம் அலைமோதியது.

கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பொது தரிசனம் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 2 மணி நேரமாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பான பிறகு அங்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, விதிகளை பின்பற்ற அறிவுறுத்தினர்.