தமிழ்நாடு

“கொள்ளைப்புறமாக நுழையும் நுழைவுத்தேர்வு”: +2 தேர்வு குறித்து கல்வியாளர் ஆயிஷா நடராஜன்

EllusamyKarthik

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசை பின்பற்றக் கூடாது என கல்வியாளர் ஆயிஷா நடராஜன் தெரிவித்துள்ளார். 2020 - 21 கல்வியாண்டிற்கான CBSE பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து குஜராத் உட்பட சில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆயிஷா நடராஜன். 

“பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. பதினோராம் வகுப்பில் அவர்கள் கேட்கின்ற பாட பிரிவை கொடுங்கள் என உத்தரவு பிறப்பிக்கலாம். அதனால் இந்த விவகாரத்தில் கல்லூரியில் மாணவர்களை எப்படி அனுமதிப்பது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வந்த பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு குறித்து முடிவு செய்யலாம். நோய் தொற்று பரவல் அதிகம் உள்ள இந்த சூழலில் கொள்ளைப்புறமாக நுழைவுத்தேர்வை நுழைக்கும் பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.