தமிழ்நாடு

“மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதாரை பயன்படுத்தலாம்”- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Rasus

மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆதார் அடையாள அட்டையை மாநில அரசுகளின் மானியங்களை பெற பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதால், அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக பயன்படுத்திக் கொள்வதற்கான திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.