தமிழ்நாடு

’ஓபிஎஸ் மீதிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது’ - சி.வி.சண்முகம் காட்டம்

ச. முத்துகிருஷ்ணன்

அதிமுகவின் பொதுக்குழு கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது உட்பட அதிமுகவில் பல்வேறு சட்டங்கள் திருத்தப்பட்டன. இவை குறித்து ஈபிஎஸ் தரப்பில் அன்றே தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த பிரமாணப் பத்திரங்கள் ஆகியவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் நேரில் தரப்பட்டது.

இதனை முன்னாள் சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் அளித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் கடுமையாக விமர்சித்தார். “அதிமுகவினரின் புனிதமான கோயில் கட்சி அலுவலகம். அதை காலால் எட்டி உதைத்ததை எப்படி பார்த்துக்கொண்டிருந்தார் ஓபிஎஸ்? அது தாயின் வயிற்றிலே எட்டி உதைப்பதற்கு சமம். ஓபிஎஸ் மீதிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது. பதவிவெறிப் பிடித்து அலைபவரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது'” என்று பேசினார் சி.வி.சண்முகம்.