தமிழக அமைச்சரவையில் மாவட்ட வாரியான பிரதிநிதித்துவ விவரத்தை பார்க்கலாம்.
சென்னையில் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு என 3 பேருக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் உள்ளது. திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள் உள்ளனர்.
வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை, ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், நீலகிரி, கரூர், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல் மாவட்டங்களுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.