தமிழ்நாடு

தற்கொலை எண்ணம் வந்தால் ’104’ஐ அழையுங்கள்: சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை

தற்கொலை எண்ணம் வந்தால் ’104’ஐ அழையுங்கள்: சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை

rajakannan

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் வந்தால் ’104’எண்ணை அழைத்து பேச வேண்டும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அனிதாவின் தற்கொலை வேதனையான விஷயம். நீட் விவகாரத்தில் என்ன தவறு நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பதை விட்டு விட்டு தற்போது மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அரசுடன் இணைந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை போன்ற எண்ணம் வந்தால் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உளவியல் நிபுணர்களிடம் பேசி பக்குவம் பெற வேண்டும். ஆலோசனைகளை பெற வேண்டும்” என்றார்.

மாணவி அனிதா இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவின் தந்தை ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளர். பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் இந்த ஆண்டு மருத்துவ இடம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அனிதா தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். 

அனிதாவின் மரணத்தை தொடர்ந்து மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவினை எடுக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.