தமிழ்நாடு

தினகரனுக்கு சம்மனா? தொண்டர் தீக்குளிக்க முயற்சி

தினகரனுக்கு சம்மனா? தொண்டர் தீக்குளிக்க முயற்சி

webteam

டிடிவி தினகரனிடம் சம்மன் அளிக்க டெல்லி போலீசார் அவரது வீட்டுக்கு சென்றபோது தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த டெல்லி போலீசார், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் வீட்டிற்குள் சென்ற நேரத்தில் தொண்டர் ஒருவர் தன்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அருகில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். தீக்குளிக்க முயன்றவர் மயிலாப்பூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.