மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருப்பூர், திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் இல்லத் திருமண விழாவில் பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது “கருணாநிதிக்கு பின்னர் யார் என்று வருகிற போது ஸ்டாலின் தளபதியாக மட்டுமல்லாமல் எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் அமர்ந்திருக்கிறார். அதிலிருந்து நான் ஒன்றை எடுத்துக்கொள்கிறேன். நாங்கள் உழைக்க வேண்டியது கருணாநிதியை போல இன்னும் நிறைய இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.