நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினரானதாலும், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்ததாலும், இவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாங்குநேரியில் அதிமுக சார்பில் நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ நாராயணன் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் களம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த இரு தொகுதிகளிலும் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் ஐம்பதும், நாங்குநேரியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 110-ம் பதற்றமானவைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வருகிற 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.