தமிழ்நாடு

"சோதனைக்கு பயமில்லை., வாங்க தாராளமாக வாங்க " - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

"சோதனைக்கு பயமில்லை., வாங்க தாராளமாக வாங்க " - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

kaleelrahman

'எனது வீட்டிற்கு சோதனைக்கு வந்தாலும் பயமில்லை. வாங்க தாராளமாக வாங்க' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் உறவினர் சிவக்குமாரின் வீடு நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. இங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வீட்டில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தங்கியுள்ளார். இவர் இருக்கும் போதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உள்ளே சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த வீட்டிற்கு வந்தார். உள்ளே செல்ல காவல்துறை அனுமதிக்கவில்லை. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்... 'திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அதிமுகவை அழித்துவிட வேண்டும் நோக்கிலும், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கிலும் விடியா திமுக அரசு இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால், அதிமுக அமைச்சர்கள் ஊழல் வாதிகள் என்ற மாய பிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த காவல்துறையை திமுக அரசு ஏவிவிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பொங்கல் பண்டிகையை ஒட்டி திமுக அரசு வழங்கிய பரிசு பொருட்கள் தரமற்று கிடந்தது. பொதுமக்கள் குப்பை தொட்டியில் கொட்டும் அளவுக்கு இருந்ததால் அதை மறைக்க சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திராணி இருந்தால் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடத்தினால் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெற முடியாது. திமுக அரசு குறித்து யாரு கருத்து தெரிவித்தாலும் காவல்துறையை ஏவி சோதனை என்ற பெயரில் மிரட்டுவதாகவும், கருத்து சுதந்திரம் பறிபோய் இருக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வரலாம். எத்தனையோ சோதனையை பார்த்தவர்கள் நாங்கள். பூச்சாண்டி இது போன்றுக்கு பயப்பட மாட்டோம். வாங்க எப்போது வேண்டுமானாலும் வாங்க கவலைப்பட போவதில்லை' என்று தெரிவித்தார்.