bussy anand
bussy anand pt web
தமிழ்நாடு

”தரம் தாழ்ந்த, ஆபாச பதிவுகள் வேண்டாம்”-மக்கள் இயக்க ஐடி விங் ஆலோசனை கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு

Angeshwar G

விஜய் மக்கள் இயக்கம் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “31 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்றம்.. 15 ஆண்டு முன்பு மக்கள் இயக்கமாக மாறியது. இனி வரும் காலத்தில் வேறு பரிமாற்றம் எடுக்க உள்ளது‌. அதற்கு தயாராக வேண்டும். அதற்கு தான் இந்த ஆலோசனை கூட்டம். இளைஞர் அணி மாணவர் அணி வர்த்தக அணி தொழிலாளர் அணி மகளிர் அண வழக்கறிஞர் அணி வர்த்தகம் அணி விவசாயம் அணி உள்பட பலமாக வைத்திருக்கும் இயக்கம் விஜய் மக்கள் இயக்கம்.. இந்த இயக்கம் மக்களுக்கு நல்லது செய்து வருகிறது.

விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேறு பறிமானம் எடுக்க உள்ளது. தமிழக அளவில் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் செயல் பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மூன்று லட்சம் பேர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் நல்ல கருத்துக்களை பதிவிடுவதற்கு ஏதுவாக தற்போது ஐடி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தில் கீழ் உள்ள பல்வேறு அணிகளின் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 30,000 நிர்வாகிகள் நியமிக்கப்பட திட்டமிடப்பட்ட உள்ளனர். இளைஞர்களிடையே பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் சமூக ஊடங்களால் புரட்சி ஏற்பட்டதை ஜல்லிக்கட்டு மெரினா போராட்டத்தை எடுத்துக்காட்டாக கூறலாம். அந்த வகையில் மற்ற ஊடகங்களை விட சமூக ஊடகங்களின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

அரசியல் தளத்தில் சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் பிரச்சாரங்கள் மக்களிடையே எளிதில் சென்றடைகின்றன. தற்போது மக்கள் இயக்கத்தின் கீழ் 1600க்கு மேற்பட்ட whatsapp குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இயக்க உறுப்பினர்கள் தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். தமிழக மக்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்துக்குமான தொடர்பை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்ப அணியை பலப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் அதனை லைக் ஷேர் செய்து மில்லியன் கணக்கில் தாண்ட வைக்க வேண்டும். மக்கள் இயக்கத்தில் இருக்கும் நிர்வாகிகள் யாரை சமூக ஊடகங்களில் பின்தொடர வேண்டும் என்பதை நெறிமுறைகளின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும். சமூக வலைதளங்களில் பதிவிடும் போது கருத்துகள் ரீதியான பதிலாக இருக்க வேண்டும். எந்த பதிவும் தரம் தாழ்ந்தோ, ஆபாச வார்த்தைகளோ, வன்முறையை தூண்டும் வகையிலோ பதிவுகள், பதில்கள் இருக்கக் கூடாது” என்றார்.