தமிழ்நாடு

பஸ் பாஸ் பிரச்னை: பேருந்தை சிறைபிடித்த தொழிற்சங்கத்தினர்

பஸ் பாஸ் பிரச்னை: பேருந்தை சிறைபிடித்த தொழிற்சங்கத்தினர்

webteam

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியின் பஸ் பாஸ் செல்லாது என நடத்துநர் கூறியதை அடுத்து ஏற்பட்ட பிரச்னையால் தொழிற்சங்கத்தினர் அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.

வறட்சி நிவாரணம் கோரி கோவையில்‌ நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாலபாரதி திண்டுக்கல்லில் இருந்து அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பாலபாரதியின் பஸ் பாஸ் செல்லாது என நடத்துநர் செல்வராஜ் கூறியதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தாராபுரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. பிறகு சிஐடியூ தொழிற்ச‌ங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள்‌ சங்கத்தினர் பேருந்தை சிறைபிடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து கோபிச்செட்டிபாளையம் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாலபாரதி வேறு பேருந்தில் பயணம் செய்தார்.