தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதால் பிச்சைக்காரர்கள் 1ரூபாய் பிச்சை போட்டால் நம்மை ஏளனமாக பார்ப்பார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, "பேருந்து கட்டணத்தை தமிழக முதல்வர் மனமுவந்து ஏற்றவில்லை, தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் கட்டணத்தை உயர்த்த வேண்டி உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. பேருந்து கட்டண உயர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்கட்சிகள் வேண்டுமானால் இதை வைத்து அரசியல் செய்யலாம். தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது, ஆகவே பேருந்து கட்டணத்தை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். இன்றைய நிலையில் பிச்சைக்காரர்கள் 1 ரூபாய் பிச்சை போட்டால் நம்மை ஏளனமாக பார்ப்பார்கள். ஆகவே இந்தக் கட்டண உயர்வு ஏற்றம் அல்ல” என அவர் தெரிவித்தார்.