தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வுகள்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இயங்கத் தொடங்கிய பேருந்துகள்

ஊரடங்கு தளர்வுகள்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இயங்கத் தொடங்கிய பேருந்துகள்

Sinekadhara

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கத்தொடங்கியுள்ளன.

கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, இந்த 4 மாவட்டங்களிலும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி 1,400 பேருந்துகளை முதற்கட்டமாக இயக்க மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என கூறியுள்ள மாநகர போக்குவரத்துக்கழகம், கடைசி பேருந்து இரவு எத்தனை மணிக்கு இயக்கப்படும் என்பதை குறிப்பிடவில்லை.

மெட்ரோ ரயில்களை பொறுத்தவரை காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலையில் 5 நிமிட இடைவெளியிலும் பிற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.