தமிழ்நாடு

நெல்லை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய விரைவுப் பேருந்து

webteam

குற்றாலம் அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்ற விரைவுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அரிகரா நதி மற்றும் குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று அரிகரா நதி தரைப்பாலத்தை கடக்க முயன்றுள்ளது. இந்த பகுதியில் பேருந்துகள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோது, அதன் ஓட்டுநர் பேருந்தை தரைப்பாலத்தின் வழியே கடக்க முயற்சித்துள்ளார்.

இதனால் பேருந்து, நடு வழியில் சிக்கியது. மேலும் பேருந்தில் பயணித்த 40 பயணிகள் அச்சத்தில் கத்தி உள்ளனர். பின்பு அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால் அரசு பேருந்து, வெள்ளத்தில் மாட்டிக்கொண்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேருந்தை மீட்கும் பணியும் தாமதமாகியுள்ளது. அதேபோல் நெல்லை மாவட்டத்தில் புயல் மற்றும் மழை பாதிப்பை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.