தமிழ்நாடு

பேருந்து கட்டண உயர்வு மறுபரிசீலனை செய்யப்படும்: துணை முதல்வர்

பேருந்து கட்டண உயர்வு மறுபரிசீலனை செய்யப்படும்: துணை முதல்வர்

webteam

பேருந்து கட்டண உயர்வு மறுபரிசீலனை செய்யப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார். கோவை ஜல்லிக்கட்டு அழைப்பிதழில் பெயர் இல்லாதது பற்றி நான் கவலைப்படவில்லை எனக் கூறினார்.

தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் 50 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு பேருந்து கட்டண உ‌யர்வை திரும்ப பெறவில்லை என்றால், திமுக தொடர் போராட்டங்களில் ஈடுபடும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் துணை முதலமைச்சர் கட்டண உயர்வு மறுபரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார்.