தமிழ்நாடு

சென்னை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து - பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்

சென்னை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து - பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்

கலிலுல்லா

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மாநகர பேருந்து பயணிகளுடன் சிக்கியுள்ளது.

வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரில் பல பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் புகுந்ததால் பெரும்பாலான சுரங்கபாதைகள் மூடப்பட்டன. இந்நிலையில் இன்று பயணிகளுடன் போரூர்- மந்தைவெளி மார்க்கமான 12M அரசு மாநகர பேருந்து சைதாப்பேட்டையில் உள்ளஅரங்கநாதன் சுரங்கப்பாதை மழை நீரில் சிக்கியுள்ளது.

சுரங்கப்பாதையில் மழைநீர் குறைவாக தேங்கியிருப்பதாக நினைத்து ஓட்டுநர் இயக்கிய நிலையில் பேருந்து சிக்கியது. மழைநீரில் சிக்கிக்கொண்ட நிலையில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர்