தமிழ்நாடு

தொழிற்சங்க நிர்வாகிகள் திடீர் மோதல்: போலீஸ் குவிப்பு

webteam

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகளிடையே திடீர் மோதல் ஏற்பட்டதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், தொ.மு.ச தொழிற்சங்கத்தினருக்கும் அதிமுக அம்மா அணியினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
பேருந்துகளை பணிமனையில் நிறுத்தச்சென்ற ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் பேருந்துகளை இயக்குமாறு அதிமுக அம்மா அணியினர் வற்புறுத்தியதால் இந்த மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, வட்டாச்சியர் தமிழ்மணி ஆகியோர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதே போல, திண்டுக்கல் மாவட்டம் பழனியில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை, காவல்துறையினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பணிமனைக்குள் புகுந்த காவல்துறையினர் ஒட்டுனர்கள் மற்றும் நடத்துநர்களை வலுக்காட்டாயமாக வெளியேற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.