தமிழ்நாடு

அதிவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் !

அதிவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் !

webteam

கோவையில் அதிவேகமாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். 

கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை ,மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை போன்ற முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளும் அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதில் குறிப்பக தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகிறது.

இதில் ஒண்டிபுதூர்-துடியலூர் செல்லும் TN 66 P 3773 என்ற எண் கொண்ட தனியார் பேருந்து சாலைகளில் அதிவேகமாக பேருந்தை இயக்குவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் இந்தப் பேருந்தானது கடந்த 11 ம் தேதி மாலை ஹோப்ஸ் பகுதியிலிருந்து சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.இது சுமார் 60லிருந்து 70 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகமாக இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

அதேபோல அதிக ஹாரன் சத்தத்தை எழுப்பியும் இந்த வாகனத்தை இயக்கி வருகின்றனர்.மேலும் அதிவேகமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் இந்த பேருந்தில் பயணிகள் தொங்கியபடி செல்லும் காட்சிகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பேருந்துக்குள் பயணம் செய்பவர்களுக்கும், பேருந்துக்கு வெளியில் இருப்பவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சமூக வளைதளங்களில் இந்த காட்சிகள் வேகமாக பரவியதை அடுத்து காவல் துறையினர் அந்த பேருந்தை பிடித்து அபராதம் விதித்தனர்.