தமிழ்நாடு

சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்

சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்

webteam

குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான பாதையில், காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி ‌வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

அடையாறில் இருந்து காமராஜர் சாலையில், பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள், தேவநாதன் சாலை, லஸ் சந்திப்பு, ஒயிட்ஸ் சாலை, அண்ணாசாலை வழியாக பாரிமுனைக்கு சென்றடையலாம். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை வழியாக வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்பட்டுகின்றன.

வாலாஜா மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பு வழியாக உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படுகின்றன. அந்த வழியில் செல்லும் மாநகர பேருந்துகள் மட்டும் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படுகின்றன. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படுகிறது. ‌

இதுபோல சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கருதி வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு த‌ருமாறும் காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்ப‌ட்டுள்ளது.