தமிழ்நாடு

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

kaleelrahman

தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்

தமிழக நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதில் டீசல் கட்டணம் உயரும் போதெல்லாம் பஸ் கட்டணம் உயர்த்தப்படாததால் போக்குவரத்துக் கழகம் கடும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாகவும். அரசு பேருந்து 1 கிலோ மீட்டர் ஓடினால் சுமார் 60 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டுவந்த நிலையில். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.