தமிழ்நாடு

புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்வு நிறுத்தி வைப்பு

புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்வு நிறுத்தி வைப்பு

Rasus

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அம்மாநில அரசு கடந்த 17-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நகரப் பேருந்துகளில் ஆரம்ப நிலைக் கட்டணம் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 7 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. விரைவுப் பேருந்துகளில் கிலோமீட்டர் ஒன்றுக்கு 50 காசுகளாக இருந்த கட்டணம் 90 காசுகளாக உயர்த்தப்பட்டது. மேலும், சாதாரண பேருந்துகளில் 5 ரூபாயாக உள்ள ஆரம்ப நிலைக் கட்டணம் 8 ரூபாயாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் பேருந்து கட்டணம் 90 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. எனவே பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பேருந்து கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.