ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 10 -ல் தொடங்கி வைக்கிறார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ 4000 -ல் முதல் தவணைத் தொகை ரூ 2000 வழங்கும் திட்டத்தை மே 10 -ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்” என்றார்.
அதே போல, தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் , “ முழு ஊரடங்கை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல விரும்புவோருக்கு தேவையான பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகள் தேவையை உறுதி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக, தமிழகத்தின் 23 ஆவது முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின்பால் விலை குறைப்பு, சாதரண பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.