தமிழ்நாடு

மது பாட்டில்கள் இல்லாத டாஸ்மாக் - கடையின் பூட்டை உடைத்து ஏமாந்த மர்ம நபர்கள்

மது பாட்டில்கள் இல்லாத டாஸ்மாக் - கடையின் பூட்டை உடைத்து ஏமாந்த மர்ம நபர்கள்

jagadeesh

மது பாட்டில்கள் இல்லாத டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட முயன்ற மர்ம நபர்களுக்கு ஏமாற்றம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள விருக்கல்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டுவருகிறது. ஊரடங்கு காரணமாக இந்த விருகல்பட்டி கடை உட்பட உடுமலை பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில் கள் உடுமலை நகராட்சி மண்டபத்தில் காவல்துறை கண்காணிப்போடு பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளது.

இந்நிலையில் ஊரையொட்டி ஒதுக்குபுறமாக உள்ள விருகல்பட்டி டாஸ்மாக் கடையில் மது பாட்டில் இருக்குமென நம்பி மர்ம நபர்கள் உள்ளே நுழைய பக்கவாட்டு சுவரை துளையிட முயன்றனர் அது முடியாததால் கடையின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு மதுபாட்டில்கள் ஏதும் இல்லாமல் வெற்று அறையாய் காட்சியளித்தால் வெறுத்துபோய் திரும்பியுள்ளனர்.

திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு வண்டிவைத்து கடத்திய கதையாய் சுவரைதுளையிட முயன்று பூட்டை உடைத்து உள்ளே ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே விருகல்பட்டி சுற்று வட்டாரபகுதியில் காவல்துறை யினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.