அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக மாடு பிடி வீரர்களுடன், காளைகளுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக மாடுபிடி வீரர்களுடன், ஜல்லிக்கட்டு காளைகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் பிப்ரவரி 10ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதையொட்டி காளைகளுக்கு நீச்சல் , நடைப்பயிற்சி, வடம்போட்டு பழக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு பகுதியில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளும் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்குவதற்கான பயிற்சிகளை மாடு பிடி வீரர்களும் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.