தமிழ்நாடு

மக்களை துரத்தி துரத்தி கடித்த எருமை : பழனியில் பரபரப்பு

மக்களை துரத்தி துரத்தி கடித்த எருமை : பழனியில் பரபரப்பு

webteam

பழனியில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழனியில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை மாட்டால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. பழனி நகர் முழுவதும் ஏராளமான எருமை மாடுகள் சுற்றி திரிகின்றன. தாராபுரம் சாலையில் எருமை மாட்டை வெறி நாய் ஒன்று கண்டித்துள்ளது. இதனால் எருமை மாட்டுக்கும் வெறி பிடித்துள்ளது. இந்நிலையில் பழனி நகரில் சுற்றி வந்த வெறி பிடித்த எருமை மாடு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி துரத்தி கடிக்க முயன்றது. இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி தீயணைப்பு துறை வீரர்கள் மாட்டை போராடி பிடித்தனர். பிடிபட்ட எருமை மாடு உரிமையாளர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.