தமிழ்நாடு

மத்திய பட்ஜெட்: பாதுகாப்புத்துறைக்கு தளவாடங்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய நடவடிக்கை

நிவேதா ஜெகராஜா

நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பாதுகாப்புத்துறைக்கு தேவையான தளவாடங்களில் 68%-ஐ உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகளிருக்கு உதவும் மூன்று முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்படவுள்ளன என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல கிராமப்புரங்களில் இணைய சேவையை நிலைப்படுத்த, பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை தொடங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக பத்திரப்பதிவில் ஒரே நாடு ஒரே பதிவு என்ற நடைமுறை கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.