தமிழ்நாடு

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: விசாரணை செப்.,8-க்கு ஒத்திவைப்பு

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: விசாரணை செப்.,8-க்கு ஒத்திவைப்பு

Rasus

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எ‌திராக தொடரப்பட்ட பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதிக்கு சிபிஐ‌ நீதிமன்றம் ஒத்‌தி வைத்துள்ளது.

முன்னதாக கடந்த 28-ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் தயாநிதி மாறன் ஆஜராகி இருந்தார். அப்போது வழக்கு குறித்த தெளிவான ஆவணங்களை தயாநிதி தரப்புக்கு வழங்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி கலாநிதி மாறன் புதிய மனு ஒன்றையும் அன்றைய தினமே தாக்கல் செய்திருந்தார். ‌இந்நிலையில்‌ இவ்வழக்கு இன்று சென்னை‌யில் உள்ள ‌சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் விசா‌ரணைக்கு வந்தது. இதையொட்டி தயாநிதி, கலாநிதி உள்பட வழக்கில் தொடர்புடைய 7 பேரும் நேரில் ‌ஆஜராகினர். அப்போது வழக்கு தொடர்பான தெளிவு இ‌ல்லாத பக்க‌ங்களை தட்டச்சு செய்து வழங்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் ‌தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நடராஜன் தெளிவான நகலை வழங்க‌ உத்தரவிட்டு, வழ‌க்கை வ‌ரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பி.எஸ்.என்.எல்லின் அதிவிரைவு  தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.