தமிழ்நாடு

நிரந்தர பாலம் இல்லாமல் காவேரி கரையைக் கடக்க முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

நிரந்தர பாலம் இல்லாமல் காவேரி கரையைக் கடக்க முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

webteam

காவேரி ஆற்று பகுதியைக் கடக்கவும் ஒரு நிரந்திர தீரவை ஏற்படுத்தவும் பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதிகள் தருமபுரி, சேலம் மாவட்டத்தின் எல்லைகளை இணைக்கிறது. காவேரி ஆற்றின் இடதுபுறத்தில் நாகமரை, நெருப்பூர், ஏரியூர், பென்னாகரம் மற்றும் வலது பகுதியில் மேட்டூர், கொளத்தூர், பன்னவாடி உள்ளிட்ட கிராமங்களும் இருந்து வருகின்றன. இந்த இரண்டு மாவட்டத்தின் எல்லைகளை காவேரி ஆற்றை கடந்தால் எளிமையாக செல்லமுடியும். இல்லையென்றால் பல மைல்களை சுற்றிதான் செல்ல வேண்டி வரும். 

காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்தால், இந்த நாகமரை, பன்னவாடி பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளளவையும் எட்டும் பட்சத்தில், இந்தப் பகுதிகளில் காவரி ஆற்றிலிருந்து இருபுறமும் சுமார் ஐந்து கி.மீ தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் நாகமரை, பன்னவாடி பரிசல் துறையில் தருமபுரி, சேலம் மாவட்டங்களுக்கு காவேரி ஆற்றை கடந்து செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகள் கல்லூரி செல்லும் மாணவர்கள் சுமார் 10 கி.மீதூரம் 1 மணி நேரம் பார்சலில் பயணம்செய்வர். இந்தப் பரிசல் பயணம் தண்ணீர் குறைவாக வரும் காலத்தில்  காலை 6 மணி முதல் மாலை 6 மணி இருக்கும். நீர்வரத்து அதிகமாக இருந்தால், நேரம் குறைக்கப்படும்.

இந்த நாகமரை, பன்னவாடி பாரிசல்துறையில் உள்ள கிராமத்தில் பெரும்பாலானோர் பரிசல் ஓட்டுவதும், மின்பிடிப்பதையும் பிரதான தொழிலை செய்து வந்தனர். இதுவரையில் காவேரி ஆற்றை மக்கள் எளிமையாக கடந்த சென்றதாக வரலாறுகளே கிடையாது. வற்றாத நீராக இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் எப்பொழுதும் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கும். அப்பொழுது  கரையை தாண்டி விட ஆயில் எஞ்சின் பொருத்தப்பட்ட பரிசலில் ஆட்களையும், சாதரண படகில் வாகனங்கள் மற்றும் கால்நடைகளை ஏற்றி செல்வர். பரிசல் சவாரிக்கு ஆட்களுக்கு ரூ.10-ம், வாகனங்களுக்கு ரூ.30-ம் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணம் தண்ணீர் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோனதன் காரணமாகவும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுத்ததாலும், பரந்து விரிந்து கடல் போல் காட்சியளித்து வந்த காவேரி ஆறு சுருங்கி கால்வாயாக தண்ணீர் இல்லாமல் போனது.

இதனால் தருமபுரி, சேலம் மாவட்ட பகுதிகளுக்கு ஆற்றை கடந்து செல்பவர்கள் மிகவும் எளிமையாக கரையைக் கடந்து செல்கின்றனர். நாகமரையிலிருந்து காவேரி ஆறு வரை ஷேர் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆட்களை ஏற்றி செல்கின்றன. 
பன்னவாடியிலிருந்து ஆறு வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்வதால், மக்கள் காவேரி ஆற்றைக் கடக்க எந்த ஒரு சிரமமுமின்றி எளிமையாக சென்று வருகின்றனர். இதனால் கரையைக் கடக்க பயன்படுத்தப்பட்டு வந்த ஆயில் எஞ்சின் மற்றும் சாதாரண படகுகள் அனைத்து கரையில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தருமபுரி மாவட்டம் மற்றும் கர்நாடக் மாநிலத்தில் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவேரி ஆற்றில் தண்ணீர் வேகமாக வருவதால், நாகமரையிலிருந்து பண்ணவாடிக்கு செல்லும் சாதாரண படகுடன், ஆயில் எஞ்சின் படகு சாவாரி தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு ஆயில் எஞ்சின் படகு மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்தால், மேட்டூர் அணையின் நீர்மட்ட உயர்ந்தால் தான் அனைத்து படகுகளும் இயக்கமுடியும். இந்த ஆயில் எஞ்சின் படகு சாவரி தொடங்கியது மகிழ்ச்சியளித்தாலும், இந்தப் பகுதியை கடக்க ஒரு நிரந்திர தீரவை ஏற்படுத்த பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தகவல்கள் : சே.விவேகானந்தன்,செய்தியாளர்.