கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு, 5 கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே எடையூர்- மன்னம்பாடி இடையே உள்ள உப்பு ஓடையின் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், எடையூர், கோவிலூர், சிறுமங்கலம், மதுரவல்லி, நரசிங்கமங்கலம் ஆகிய கிராம மக்கள் விருத்தாசலம், பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாற்றுப்பாதையில் செல்ல 15 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் அந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மேல்மட்ட பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.