தமிழ்நாடு

பணப்பட்டுவாடா வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சிடி ஆதாரம் தாக்கல்

பணப்பட்டுவாடா வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சிடி ஆதாரம் தாக்கல்

webteam

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் சிடி ஆதாரங்களைத் தாக்கல் செய்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சுந்தர் ஆகியோர் முன் நடைபெற்ற விசாரணையின்போது வருமான வரித்துறையின் அறிக்கையை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. இதே போல் பணப்பட்டு வாடா தொடர்பாக காவல்துறை தரப்பிலும் சி.டி.ஆதாரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பண விநியோகம் செய்ததாக குற்றசாட்டுகள் எழுந்ததை அடுத்து, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.