சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை வழங்க 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 57 வயதான சாந்தி என்பவர் உயிரிழந்தார். ஆனால், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க சுகாதார ஆய்வாளர் தசரதன் 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம்கொடுக்க மறுத்ததால் இரண்டாவது நாளாக உடலை வழங்காத நிலையில், இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தியிடம் முறையிடப்பட்டது.
பின்னர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாங்காடு சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரேச பெருமாள், புனித தோமையார் மலை பகுதி சுகாதார ஆய்வாளர் தசரதன் ஆகிய இருவரும் லஞ்சம் கேட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.