தமிழ்நாடு

மதுபாட்டில்களை உடைத்து ஆர்ப்பாட்டம்

மதுபாட்டில்களை உடைத்து ஆர்ப்பாட்டம்

webteam

கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாகக் கூறி கடையிலிருந்த மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். 24 மணிநேரமும் மதுக்கடை திறந்திருப்பதால் அவ்வழியாக செல்லும் இளம்பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.