காலை உணவுத்திட்டம்
காலை உணவுத்திட்டம் pt web
தமிழ்நாடு

“காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே நடத்தும்” - சென்னை மாநகராட்சி விளக்கம்

PT WEB

சென்னை மாநகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 37 பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் இத்திட்டம் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர்அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் “ஒப்பந்த அடிப்படையில் காலை உணவை தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.

எனினும் காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுக்கும் ஒப்பந்த அறிவிப்பு தற்போது கோரப்படவில்லை. இதனடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பிலேயே காலை உணவு திட்டம் தொடர்ந்து நடத்தப்படும்” என மாநகராட்சி தெரிவித்துள்ளது.