தமிழ்நாடு

ராஜநாகத்துடன் செல்ஃபி ! கைது செய்தது போலீஸ்

ராஜநாகத்துடன் செல்ஃபி ! கைது செய்தது போலீஸ்

webteam

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட சேரம்பாடியில் ராஜநாகத்தை, துன்புறுத்தி செல்பி எடுத்த சமூக வலைதளங்களில் பரவ விட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அழிவின் பிடியில் உள்ள ராஜநாகம் அதிகளவில் உள்ளது. சேரம்பாடி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளான சந்தனமாக்குன்னு, கண்ணம்வயல், நாயக்கன்சோலை, புஞ்சைக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் குடியிறுப்பு பகுதிகளில் வந்த 10-க்கும் மேற்ப்பட்ட ராஜநாகங்கள் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்டது. இதனை ஒரு சமூக பணியாக ராஜ்குமார் என்பவர் மேற்க்கொண்டுள்ளார். 

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி சேரம்பாடி பஜாரை ஒட்டிய கண்ணம்வயல் செல்லும் சாலையில் மூங்கில் மரத்தில் படுத்திருந்த ராஜநாகத்தை பிடித்து துன்புறுத்தி, தங்கள் தோளில் போட்டு செல்பி எடுத்து சமூகவளைதலங்களில் சிலர் பதிவு செய்திருந்தனர். இது குறித்த புகாரையடுத்து கூடலூர் வன அலுவலர் திலீப் உத்தரவையடுத்து, சேரம்பாடி வனச்சரகர் மனோகரன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்க்கொண்டர். பின்னர் ராஜநாகத்தை பிடித்து துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்து, சேரம்பாடியை சேர்ந்த மணிகண்டன், ராமானுஜம், தினேஷ்குமார், யுகேஷ்வரன், விக்னேஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். இதன்மூலம் வருங்காலங்களில் வனவிலங்குகள் மீதான துன்புறுத்தல் குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.