தமிழ்நாடு

கரூர்: கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட காதலன் - காதலியின் தந்தை கைது

கரூர்: கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட காதலன் - காதலியின் தந்தை கைது

webteam

கரூரில் காதலி கண் முன்னே காதலரை குத்திக் கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன், அப்பகுதி சலூன் கடை நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த மீனா என்ற பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு மீனாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் ஈஸ்வரன் கோயிலுக்கு நண்பர்களுடன் சென்ற ஹரிஹரன், காதலி மீனாவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த பெண்ணின் உறவினர்கள், ஹரிஹரனை மீனாவின் கண்முன்னே சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். பதறிப்போன நண்பர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஹரிஹரன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணின் உறவினர்களான பெரியப்பா சங்கர், மாமா கார்த்திகேயன் மற்றொரு உறவினர் வெள்ளைச்சாமி ஆகிய மூன்று பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், பெண்ணின் தந்தை வேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் உறவினர்களே ஆணவத்திற்காக கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.