தமிழ்நாடு

மாணவர்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி: 300 பேர் பங்கேற்பு

மாணவர்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி: 300 பேர் பங்கேற்பு

webteam

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இடையேயான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

ஈரோடு மண்டல அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 3 பிரிவுகளின் கீழ் பல்வேறு எடைப் பிரிவுகளுக்குட்ப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெறும் மாணவர்கள் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறை சார்பில் ஈரோடு மண்டல அளவிலான மாணவர்களுக்கான குத்துசண்டை போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. போட்டிகள் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 11 எடை அளவுகளிலும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 13 எடை அளவுகளிலும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 11 எடை அளவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் நாமக்கல், ஈரோடு, கோபி, திருப்பூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த 307 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதலிடம் பிடிப்பவர்கள் அக்டோபர் மாதம் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவர்.