தமிழ்நாடு

குழந்தைகள் நலனை மத்திய, மாநில அரசுகள் கவனிக்கவில்லை: ரஜினிகாந்த் வேதனை

குழந்தைகள் நலனை மத்திய, மாநில அரசுகள் கவனிக்கவில்லை: ரஜினிகாந்த் வேதனை

Rasus

குழந்தைகளின் பாதுகாப்புக்காக மேற்கத்திய நாடுகள் செலவு செய்வதில் ஒரு சதவிகிதம் கூட மத்திய, மாநில அரசுகள் செலவு செய்வதில்லை என நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள‌ ‘குழந்தைகளுக்‌கான அமைதி’ என்ற அமைப்பின் தொடக்க நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் உள்பட அதில் பங்கேற்ற அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நிமிடம் மவுனமாக பிரார்த்தனை செய்தனர்.

தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த குழந்தைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ‌‌சிக்கலில் ‌சிக்கியிருக்கும் குழந்தைகளை‌க் காப்பாற்றுவதற்கான தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த் நாட்டின் எதிர்காலமே குழந்தைகள் தான் என்றும், ‌அவர்கள் பூமியில் நடமாடும் பூக்கள் என்றும் தெரிவித்தார்.

குழந்தைகளை பாதுகாப்பதற்காக அமைப்பை தொடங்கிய தனது மனைவி லதாவுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவ‌ர்களுக்கும்‌ ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார்.