ரயில் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

பொங்கல் விடுமுறை| ரெடியா மக்களே.. ரயில் பயணிகளுக்கான முக்கிய தகவல்!

பொங்கல் விடுமுறைக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது..

PT WEB

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஊருக்கு செல்லும் பயணிகள் ரயில் முன்பதிவை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுவாக ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யலாம். இதன்படி, ஜனவரி 9 முதல் 18 வரை நடைபெறும் பொங்கல் காலப் பயணங்களுக்கான முன்பதிவு இன்று முதல் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும்.

ரயில் சேவை

பொங்கல் வாரத்தில் ரயில் பயணிகளின் பெரும் நெரிசல் எதிர்பார்க்கப்படுவதால், டிக்கெட்டுகள் விரைவாக நிறைவடையும் வாய்ப்பு உள்ளது. எனவே, பயணிகள் தங்கள் பயணத் தேதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, IRCTC இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு மையங்கள் வழியாக டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.