சென்னை புத்தக சங்கமத்தின் 5-ஆம் ஆண்டு சிறப்பு புத்தகக் காட்சி சென்னை பெரியார் திடலில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. புத்தகக் காட்சியினை வரியியல் வல்லுநர் இராஜரத்தினம் தலைமையில், இந்தியக் கடற்படை ஐஎன்எஸ் அடையார் தலைமை அதிகாரி ஜே.சுரேஷ் திறந்து வைக்கிறார்.
மாலை 6.30 மணிக்கு ‘புத்தகர் விருது’ வழங்கும் விழா நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டுக்கான ‘புத்தகர் விருது’களை எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், ரெங்கையா முருகன் ஆகியோர் பெற உள்ளனர். விருதினை கி.வீரமணி வழங்கி சிறப்புறையும் ஆற்றுகிறார்.