பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்வியில்,
கூற்று - ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார்.
காரணம் - ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார், விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.
இந்த கேள்வியில் இரண்டு வாக்கியங்களுமே முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் இதற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இன்று பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் நான்காவது கேள்வி எண்ணிற்கான விடை அளித்திருந்தாலே அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.