தமிழ்நாடு

ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் புரளி என அம்பலம்..!

ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் புரளி என அம்பலம்..!

Rasus

சென்னையை அடுத்த கந்தஞ்சாவடியில் ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழைய மகாபலிபுரம்சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்குள்ள காவலாளி அறைக்கு தொடர்பு கொண்ட ஒருவர், வெடிகுண்டு குறித்த தகவலை கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஊழியர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றிய அவர்கள், 13 மாடிகளைக் கொண்ட கட்டடத்தை சோதனையிட்டனர். சுமார் 4 மணி நேர சோதனைக்குப்பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இன்று இந்த கம்பெனியில் கான்பிரன்ஸ் நடக்க உள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தொழில் போட்டி காரணமாகவும் மிரட்டல் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தரமணி போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.