வெடிகுண்டு மிரட்டல் முகநூல்
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிமுக அமைச்சர் ஒருவருக்கு கொலை மிரட்டல் வந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபகாலமாக கொலை மிரட்டல் விடும் சம்பங்கள் அதிகமாக நடைபெற்று வருவதை காணமுடிகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று போலி மின்னஞ்சல்கள் வருவதை பார்க்க முடிகிறது. இந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பரபரப்பு கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து நெஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினா்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனா். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார், எங்கிருந்து மிரட்டினார்? என்பது உள்ளிட்டவை குறித்து விசாரித்து வருகின்றனா்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.